இலங்கை நெருக்கடி : ஊரடங்கு தடையை மீறி மக்கள் போராட்டம்


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 3 April 2022 8:38 AM IST (Updated: 3 April 2022 9:05 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் ஊரடங்கை மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொழும்பு,

இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 

இதனால்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அதன்படி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி கொழும்புவில் மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருட்டையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 

1 More update

Next Story