நிதிச்சிக்கன நடவடிக்கையாக மூன்று நாடுகளில் தூதரகங்களை மூடுகிறது இலங்கை
கோப்புப்படம்நிதிச்சிக்கன நடவடிக்கையாக மூன்று நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை அறிவித்துள்ளது.
கொழும்பு,
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நிதிச்சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதால இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நார்வேயின் ஒஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாங்தாத் ஆகிய நகரங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்து உள்ளது.
பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story






