அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு


அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு
x
தினத்தந்தி 10 April 2022 11:23 AM GMT (Updated: 10 April 2022 11:23 AM GMT)

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.  இதில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது.  இதனை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டது.

 இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 


Next Story