இந்தோனேசியாவில் டிரக் கவிழ்ந்து விபத்து- 17 பேர் உடல் நசுங்கி பலி


இந்தோனேசியாவில் டிரக் கவிழ்ந்து விபத்து- 17 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 13 April 2022 2:56 PM IST (Updated: 13 April 2022 2:56 PM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் 29 பேருடன் சென்ற டிரக், பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது.

ஜகார்தா,

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் 29 பேருடன் சென்ற டிரக், பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். விபத்தில் பலியானவர்கள் அனைவரும் சுரங்க தொழிலாளர்கள் ஆவர். 

ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக  மேற்கு பபுவா மாகாண தலைநகரான மனோக்வரி சென்ற போது இந்த விபத்து நேரிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். டிரக்கில் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

முறைசாரா சுரங்க நடவடிக்கைகள் இந்தோனேசியாவில் பொதுவானவை, கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் அபாயம்  உள்ள சூழலில் ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுபோன்று சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்,  நிலச்சரிவு, வெள்ளம், சுரங்க பாதைகள் சேதம் ஏற்படுதல் போன்ற அபாயங்களை அடிக்கடி எதிர்கொள்கின்ற்னார். 

1 More update

Next Story