இலங்கை பொருளாதார நெருக்கடி: கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடல்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொழும்பு,
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஏப்ரல் 18 முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுவதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story