டுவிட்டரை தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த முடியுமா? -எலான் மஸ்கின் பதிவால் பயனர்கள் அதிர்ச்சி..!


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 4 May 2022 4:51 AM GMT (Updated: 4 May 2022 4:51 AM GMT)

இலவசமாக டுவிட்டரை பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு மஸ்க் பதில் அளித்துள்ளார்.

நியூயார்க்,

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார்.

அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காகவே இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

டுவிட்டர் எலான் மஸ்க் வசம் ஆனதில் இருந்து தொடர்ந்து டுவிட்டரை வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியுமா என பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் , "சாதாரண பயனர்கள் தொடர்ந்து எப்போதும் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் " என பதிவிட்டுள்ளார்.

சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story