தன் மீதான வழக்கை முடித்து வைக்க ரூ.5¾ கோடி கொடுக்கும் டிரம்ப்


தன் மீதான வழக்கை முடித்து வைக்க ரூ.5¾ கோடி கொடுக்கும் டிரம்ப்
x
தினத்தந்தி 4 May 2022 11:32 PM GMT (Updated: 4 May 2022 11:32 PM GMT)

இந்த வழக்கை முடித்துவைக்க 7,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.5 கோடியே 72 லட்சம்) இழப்பீடாக வழங்குவதாக டிரம்பின் ஜனாதிபதி பதவியேற்பு குழு அறிவித்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தனது பதவியேற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்த செலவு செய்தாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டிரம்ப் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தது.

இந்த நிலையில் லாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய இந்த வழக்கை முடித்துவைக்க 7,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.5 கோடியே 72 லட்சம்) இழப்பீடாக வழங்குவதாக டிரம்பின் ஜனாதிபதி பதவியேற்பு குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள வாஷிங்டன் அட்டார்னி ஜெனரல் கார்ல் ரேசின் டிரம்ப் தரப்பிடம் இருந்து பெறப்படும் தொகை வாஷிங்டனில் செயல்படும் லாப நோக்கமற்ற 2 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கூறினார்.

Next Story