வேற்றுகிரக வாசிகளை கவர மனிதர்களின் நிர்வாண புகைப்படங்களை விண்வெளிக்கு அனுப்பும் நாசா..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2022 7:46 AM GMT (Updated: 6 May 2022 7:46 AM GMT)

வேற்றுகிரகவாசிகள் உடன் தொடர்பை ஏற்படுத்த நாசா பிரத்யேக திட்டத்தை தொடங்கியுள்ளது.

வாஷிங்டன்,

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள், சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. 

பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. 

வேற்றுகிரக வாசிகள் இருப்பது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நாசா  'பீகன் இன் தி கேலக்சி'  என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் உடன்  தொடர்பை ஏற்படுத்துவதை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

தற்போது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண் மற்றும் பெண் மனிதர்களின்  நிர்வாண படங்களை விண்வெளியில் ஒளிர செய்து வேற்று கிரக வாசிகளை கவரும் முயற்சியில் நாசா ஈடுபடவுள்ளது.

கணிதத்தில் உள்ள பைனரி குறியீடுகள் உடன் இந்த புகைப்படங்களை நாசா வடிவமைத்துள்ளது. இந்த குறியீடுகள் வேற்று கிரக வாசிகளுக்கு புரியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Next Story