சீனாவில் விமானம் தீ பிடித்து விபத்து...!


சீனாவில் விமானம் தீ பிடித்து விபத்து...!
x
தினத்தந்தி 12 May 2022 4:16 AM GMT (Updated: 12 May 2022 4:16 AM GMT)

சீனாவின் சோங்கிவிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் விமானம் தீ பிடித்து விபத்துக்குள்ளானது.

லாசா,

சீனாவின் சோங்கிவிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்று இன்று காலை 8. மணி அளவில் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

உடனே விமானத்தில் இருந்த 113 பயணிகள், 9 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஓடுதளத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதில் ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையை விட்டு விமானம் விலகியதால் தீப்பிடித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்த விமானம் சோங்கிவிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story