ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்


ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x

ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று, ரஷியா-உக்ரைன் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால் இங்கிலாந்தில் அதன் பாதிப்பு அதிகமானது. அதன் ஒருபகுதியாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பணவீக்கம் தாறுமாறாக எகிறியது. இதனால் இங்கிலாந்தில் ரெயில்வே, விமான நிலையம், தபால் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசாங்கத்துக்கு பெரும் அழுத்தமாக உள்ளது. இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 2-ந்தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள சுமார் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


Next Story