காதலை முறித்ததால் கல்லூரி மாணவியை கொன்று உடலை ஏரிக்கரையில் வீசிய காதலன் - இத்தாலியில் கொடூரம்


காதலை முறித்ததால் கல்லூரி மாணவியை கொன்று உடலை ஏரிக்கரையில் வீசிய காதலன் - இத்தாலியில் கொடூரம்
x

கல்லூரி மாணவியை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

ரோம்,

இத்தாலி நாட்டின் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயொமெடிக்கல் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஹுலியா சியோஷெத்தின் (வயது 22). இவரும் பிலிப்போ டுரிடா (வயது 22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் ஹுலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர்.

அதேவேளை, கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க கடந்த 16ம் தேதி ஹுலி வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அவர் தனது முன்னாள் காதலன் பிலிப்போவையும் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், வணிக வளாகத்திற்கு சென்ற ஹுலி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக ஹுலியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, ஹுலியின் வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலன் பிலிப்போவின் கார் வந்ததை கண்டுபிடித்தனர். அந்த காரில் வைத்து ஹுலியை பிலிப்போ தாக்கியது தெரியவந்தது.

மேலும், தப்பியோட முயற்சித்த ஹுலியை சரமாரியாக தாக்கிய பிலிப்போ காரில் கடத்தி சென்றுள்ளார்.

பின்னர், தன்னுடனான காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த பிலிப்போ தனது முன்னாள் காதலி ஹுலியை ஆள்நடமாட்டமற்ற ஏரிக்கரைக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு ஹுலியை பிலிப்போ கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் உடலை ஏரிக்கரையில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ஏரிக்கரையில் பிணமாக கிடந்த ஹுலியின் உடலை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய முன்னாள் காதலன் பிலிப்போவை தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பின் கிழக்கு ஜெர்மனி சாலைப்பகுதியில் பிலிப்போவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story