டென்மார்க்: வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி


டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

கோபன்ஹேகன்,

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், அந்த வணிக வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய 22 வயதான இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உள்நாட்டை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரின் பெயர் என்ன? துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.

1 More update

Next Story