வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம் என தகவல்


வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம் என தகவல்
x

வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் காயம் அடைந்தனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானின், பால்க் மாகாணத்தின் மசார்-இ-ஷெரிப் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தேசிய ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மினி பஸ்சை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டதாக மாகாண காவல்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வஜிரி கூறினார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story