அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பேரணியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி


அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பேரணியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
x

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் ரெட் ரிவர் நகரில் ஆண்டுதோறும் மோட்டார் சைக்கிள் பேரணி பிரபலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 41-வது ஆண்டு மோட்டார் சைக்கிள் பேரணி கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 28 ஆயிரம் பேர் தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் கலந்து கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் சிதறி ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story