நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி


நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 March 2024 8:44 PM GMT (Updated: 17 March 2024 7:13 AM GMT)

தெற்கு நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே நடந்த மோதலின் போது 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அபுஜா,

தெற்கு நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட பேரிடர் அழைப்பின் போது நான்கு அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதுகாப்பு தலைமையக செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துகுர் குசாவ் கூறுகையில், "எண்ணெய் வளம் மிக்க, ஆற்றங்கரை டெல்டா மாநிலத்தில் வியாழன் அன்று போமாடி கவுன்சில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், அமைதி காக்க அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள், சில சமூக இளைஞர்களால் சூழப்பட்டு கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் ஒரு கட்டளை அதிகாரி, இரண்டு மேஜர்கள், ஒரு கேப்டன் மற்றும் 12 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு வழிவகுத்தது, தாக்குதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக டெல்டாவில் ஏற்பட்ட மோதல் ஒகுவாமா மற்றும் ஒகோலோபா சமூத்தினருக்கு இடையே நிலவும் நிலப்பிரச்சனையுடன் தொடர்புடையது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.


Next Story