அமெரிக்காவில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு


அமெரிக்காவில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2024 4:59 PM GMT (Updated: 14 Feb 2024 5:04 PM GMT)

மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு ராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு பழைய கருவிப்பெட்டியை ஏலத்தில் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெட்டியில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று இருப்பதை ரிக் தற்போது கண்டுபிடித்துள்ளார். அந்த கடிதம் இர்வின் பிளெம்மிங் என்ற ஒரு ராணுவ அதிகாரியால் எழுதப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வந்துள்ள அக்கடிதத்தில் 'கடந்த கால சண்டைக்காக மன்னிப்பு கேட்கிறேன். விரைவில் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு ராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிகிறது. இதையடுத்து தற்போது இந்த கடிதத்தை உரியவரிடம் சேர்க்க ரிக் ட்ரோஜனோவ்ஸ் முயற்சித்து வருகிறார்.



Next Story