ஆண்கள் விடுதியில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி


ஆண்கள் விடுதியில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி
x

ஆண்கள் விடுதியில் மதுபோதையில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரின் உமெஷி பகுதியில் ஆண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று அதிகாலை 12 பேர் மதுக்குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மது குடித்துக்கொண்டிருந்தவர்களின் அறைக்கு சென்ற சிலர் மதுபோதையில் இருந்த அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் அறையில் மதுக்குடித்துக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க அறையில் இருந்து கீழே குதித்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story