வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை - பயங்கர சம்பவம்


வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை - பயங்கர சம்பவம்
x

வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திட்டு தப்பிச்சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story