புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடிய சிம்பான்சி குட்டி; வைரலாகும் வீடியோ


புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடிய சிம்பான்சி குட்டி; வைரலாகும் வீடியோ
x

குழந்தைகளின் நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.லண்டன்,


குழந்தைகளின் இடையேயான நட்பு எல்லைகளை கடந்தது. அந்த நட்புறவுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று வெளிவந்து உள்ளது. அதில், இரண்டு புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடும் காட்சிகள் மனம் கவர்கின்றன.

அந்த வீடியோவில், அங்கத் என்ற பெயரிடப்பட்ட சிம்பான்சி குட்டி ஒன்று, இரண்டு புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடியபடி காணப்படுகிறது. முதலில், ஒரு புலி குட்டியை நோக்கி விளையாட முற்படும்போது, அது விலகி செல்கிறது.

ஆனால், மற்றொரு புலி குட்டி அதனுடன் கட்டி பிடித்து விளையாடுகிறது. பின்பு, மற்றொரு புலி குட்டியும் இறுதியாக அங்கத்துடன் சேர்ந்து விளையாடுகிறது.

இந்த வீடியோவை மோக்சா பைபீ என்ற பெயரில் பயனாளர் ஒருவர் வெளியிட்டு உள்ளார். வீடியோவுக்கு 88 லட்சம் பார்வைகளும், 3.7 லட்சம் லைக்குகளும் கிடைத்து உள்ளன. 800-க்கும் கூடுதலானோர் விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர்.

மூன்று குட்டிகளையும் புகழ்ந்து கூறியுள்ள நெட்டிசன் ஒருவர், எப்போதும், முழுவதும் சிறந்த விசயம் இது என தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து மற்றொரு நபர், ஆட்டுக்குட்டியுடன் ஓநாய் ஒன்றாக வசிக்கலாம். இளம் ஆட்டுடன் சிறுத்தைப்புலி ஒன்றாக படுத்து இருக்கலாம். கன்றுக்குட்டியும், இளஞ்சிங்கமும் ஒன்றாக தின்று கொழுக்கலாம் மற்றும் அவர்கள் அனைவரையும் ஒரு சிறு குழந்தை வழிநடத்தி செல்லலாம் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்பு 3 புலிக்குட்டிகளுக்கு உராங்குட்டான் வகை தாய் குரங்கு ஒன்று புட்டியில் பால் கொடுக்கும் காட்சிகளும், அவற்றுடன் விளையாடிய காட்சிகளும் அடங்கிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி இருந்தது.Next Story