அனகோண்டா பிடியில் இருந்து தப்பிக்க முயலும் முதலை; நெட்டிசன்களை ஈர்த்த வீடியோ


அனகோண்டா பிடியில் இருந்து தப்பிக்க முயலும் முதலை; நெட்டிசன்களை ஈர்த்த வீடியோ
x

பிரேசிலில் சுற்றி, வளைக்க முற்படும் அனகோண்டாவின் பிடியில் இருந்து முதலை தப்பிக்க முயலும் காட்சி அடங்கிய வீடியோ நெட்டிசன்களை ஈர்த்துள்ளது.

பிரேசிலியா,



பிரேசில் நாட்டில் கெய்மன் என்ற வகையை சேர்ந்த முதலை ஒன்றை உருவில் மிக பெரிய பாம்பு வகையை சேர்ந்த பச்சை வண்ண அனகோண்டா ஒன்று சுற்றி, வளைத்துள்ளது. பொதுவாக, இதுபோன்ற பெரிய வகை நீண்ட பாம்புகள், இரையை வளைத்து, மூச்சு திணற செய்து உயிரிழக்க வைக்கும்.

அதன்பின்பு, அவற்றை உணவாக உட்கொள்ளும். ஆனால், முதலை சற்று பெரிய அளவில் இருந்துள்ளது. அனகோண்டாவின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அது போராடியுள்ளது. அனகோண்டாவும் பிடியை விடாமல் இருந்து உள்ளது.

அனகோண்டா மற்றும் முதலைக்கு இடையே நீடித்த இந்த சண்டையை அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசிக்கும் கிம் சுல்லிவன் என்பவர் வீடியோவாக படம் பிடித்து உள்ளார். இந்த வீடியோ, ஆப்ரிக்கன் வைல்டு லைப்1 என்ற இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த பதிவில், பைத்தான் வகை பாம்பு இது கிடையாது. போவா வகை பாம்பும் இல்லை. அவற்றை விட எல்லாம் மிக பெரியது: தி அனகோண்டா என தலைப்பிடப்பட்டு உள்ளது.

550 பவுண்டு எடை கொண்ட பாம்பும், முதலையும் மோதி கொண்டது பற்றிய வீடியோவை பார்த்த நெட்டிசன்களும், இறுதியில் யார் வெற்றி பெற்றனர் என்பது பற்றிய தங்களது விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.

ஒருவர், பெரிய முதலையை பாம்பு சாப்பிட்டாச்சா? என கேட்டுள்ளார். மற்றொருவர், இரண்டும் மோதலின் முடிவில் மூச்சு வாங்கியிருக்கும். அனகோண்டா முதலையை விட்டு, விட்டு போக வேண்டும். முதலையும் சோர்ந்து போயிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

வேறொருவர், யார் வென்றது? அனகோண்டா இல்லை, சரியா? என கேட்டுள்ளார். மற்றொரு நபர், வீடியோவில் அடுத்து என்ன நடந்தது என பார்க்க ஆவலாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவை 2.5 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்துள்ளனர். 7 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.




Next Story