மகளைத் தீர்த்துக் கட்ட கொடூரத் திட்டம்... சொத்துகளை சுருட்ட தாய் போட்ட பிளான்


மகளைத் தீர்த்துக் கட்ட கொடூரத் திட்டம்... சொத்துகளை சுருட்ட தாய் போட்ட பிளான்
x

ரஷியாவில் 67 வயதான பெண் ஒருவர் தனது மகளைக் கொல்ல ஆளை நியமித்துள்ளார்.

மாஸ்கோ,

சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு பெற்றோரை வீட்டை விட்டு துரத்தும் பிள்ளைகளைத் தான் பார்த்திருப்போம். ஆனால் ரஷியாவில் தனது மகளிடம் இருந்து சொத்தை அபகரிக்க, மகளையே ஆள் வைத்து தீர்த்துக் கட்ட முயன்றுள்ளார் தாய் ஒருவர்.

கிராஸ் நோயார்ஸ்கைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் தனது 49 வயது மகளைக் கொல்ல ஆளை நியமித்துள்ளார். கொலை செய்ய வந்த நபரோ, இந்த அருமைத் தாயைப் பற்றிய அனைத்து தகவல்களையும் காவல்துறையில் ஒப்புவிக்கவே, போலீசார் தகுந்த ஆதாரங்களை சேகரித்து அந்த கொடூர தாயைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

தன் மகளை கொலை செய்ய அந்த பெண் 84 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story