செர்பியாவில் வறண்ட ஆற்றில் வெளியே தெரியும் ஜெர்மனி போர்க்கப்பல்


செர்பியாவில் வறண்ட ஆற்றில் வெளியே தெரியும் ஜெர்மனி போர்க்கப்பல்
x

நீர்மட்டம் குறைந்ததால் ஆற்றில் மூழ்கியிருந்த ஜெர்மனியின் போர்க்கப்பல் ஒன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

பெல்கிராட்,

ஐரோப்பா கண்டத்தில் தற்போது பல்வேறு நாடுகளில் கடும் வறட்சி மற்றும் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில், பிரஹோவா பகுதி அருகே தனூப் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால், ஆற்றில் மூழ்கியிருந்த போர்க்கப்பல் ஒன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இது இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி பயன்படுத்தியது என்று தெரியவந்துள்ளது.

1944 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாஜி படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள், சோவியத் படைகளுக்கு எதிரான தாக்குதலை கைவிட்டு பின்வாங்கிய போது, இந்த கப்பல் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உள்ளிட்டவை வறட்சியால் ஆறுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story