புலியுடன் புகைப்படம்... உயிரை பிடித்து கொண்டு, தெறித்து ஓடிய இளைஞர்கள்...!! தேவையா இது? என விளாசிய நெட்டிசன்கள்


புலியுடன் புகைப்படம்... உயிரை பிடித்து கொண்டு, தெறித்து ஓடிய இளைஞர்கள்...!! தேவையா இது? என விளாசிய நெட்டிசன்கள்
x

புலியுடன் ஒன்றாக இரு இளைஞர்கள் புகைப்படம் எடுக்க போய், அது விபரீதத்தில் முடிந்த வீடியோ வைரலாகி வருகிறது.

!பாங்காக்,

வன விலங்குகள் பொதுவாக அவற்றை சீண்டும் வரையில் அமைதியாக அவற்றின் போக்கில் செல்பவை. தேவையில்லாமல் விலங்குகளை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவது ஆபத்து விளைவித்து விடும்.

அதிலும், வேட்டையாடி வாழும் விலங்குகள் என்றால் சொல்ல வேண்டியதில்லை. இதுபோன்று புலி ஒன்று சங்கிலியால் கட்டி போடப்பட்டு இருந்து உள்ளது. இரண்டு இளைஞர்கள் அதற்கு பின்னால் சென்று அமர்ந்து புகைப்படம் எடுக்க முயன்று உள்ளனர்.

ஆனால், முன்னால் இருந்த நபர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட புலியை குச்சி ஒன்றை வைத்து சீண்டியபடி இருந்து உள்ளார். சற்று பொறுமை காத்த அந்த புலி திடீரென அந்த நபரை நோக்கி உறுமியது.

இதனால், அந்த நபர் என்ன ஆனாரோ தெரியவில்லை. ஆனால், புகைப்படம் எடுக்க தயாராக இருந்த இளைஞர்கள் அந்த இடத்தில் இருந்து தெறித்து ஓடி உள்ளனர். அவர்களில் ஒருவர் அழுதே விட்டார். மற்றொரு நபர் தரையில் மண்டியிட்டு, இந்த முயற்சி வேண்டவே வேண்டாம் என்பது போல் சென்றார்.

வீடியோவில் இளைஞர்கள் தப்பி ஓடியதும், சிரிப்பலை எழுகிறது. அவர்கள் இருப்பது தெரியாமல், சத்தம் கேட்டு அந்த புலி அவர்களை நோக்கி திரும்பி பார்க்கிறது. நல்ல வேளை அது கோபப்படும் அளவுக்கு எதுவும் நடைபெறாமல் அவர்கள் தப்பினர்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர், யாரிந்த நபர்கள்? என்பது போல் புலி பார்க்கிறது என்று பதிவிட்டு சிரிப்பு எமோஜிக்களை வெளியிட்டு உள்ளார்.

இன்னும் செய்யவில்லை சகோதரரே என மற்றொருவரும், மிக எச்சரிக்கையுடன் இருங்கள் என ஒருவர் அறிவுரையும் வழங்கி உள்ளார். வாழ்நாள் முழுமைக்கும் இந்த திரில்லான சம்பவம் மறக்காமல் இருக்கும் என்று மற்றொரு நபர் தெரிவித்து உள்ளார்.


Next Story