பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிருபர் விபத்தில் சிக்கி பலி


பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிருபர் விபத்தில் சிக்கி பலி
x

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றிய நிருபர் கென்யாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.



கராச்சி,


பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனல் ஏ.ஆர்.ஒய். நியூஸ். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப். எனினும், அவர் அதில் இருந்து விலகி விட்டார். அதன்பின்பு, துபாய்க்கு அவர் சென்றுள்ளார்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அவர் சென்றார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி கென்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மறைவை அர்ஷத்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.

அவரது மறைவுக்கு பி.எம்.எல்.-என் கட்சி தலைவர் ஹினா பெர்வாயிஸ் பட் இரங்கல் தெரிவித்து உள்ளார். பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த அலி ஜைதி மற்றும் ஏ.ஆர்.ஒய். சேனல் குழுமத்தின் உரிமையாளர் சல்மான் இக்பால் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story