விஞ்ஞான ரீதியிலான பரிசோதனை... 16 நாளாக பச்சையாக சிக்கன் சாப்பிடும் நபர்


விஞ்ஞான ரீதியிலான பரிசோதனை... 16 நாளாக பச்சையாக சிக்கன் சாப்பிடும் நபர்
x
தினத்தந்தி 5 Feb 2024 6:26 PM IST (Updated: 5 Feb 2024 7:55 PM IST)
t-max-icont-min-icon

வயிறு பெருத்து வலிக்கும் வரை தொடர்ந்து இந்த சவாலை செய்ய வேண்டும் என அவர் தீர்மானித்து உள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

விஞ்ஞான ரீதியிலான பரிசோதனை என்ற பெயரில் நபர் ஒருவர் வித்தியாச முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஜான் என்ற பெயர் கொண்ட அந்த நபர், சமைக்கப்படாத பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார். கூடவே சமைக்காத பச்சை முட்டைகளையும் சாப்பிடுகிறார்.

அவருடைய பரிசோதனை பற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில், ஏதேனும் சில விசயங்களை செய்ய கூடாது என யாரேனும் என்னிடம் கூறினால், அதனை செய்து பார்க்க வேண்டும் என அது எனக்கு சிறியதோர் ஆர்வம் ஏற்படுத்தி விடும். இந்த முறை அது சிக்கனாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இதற்காக ஒன்றல்ல இரண்டல்ல... 16 நாளாக பச்சையாக சிக்கன் சாப்பிட்டு வருகிறார். இதன்படி, வயிறு பெருத்து வலிக்கும் வரை தொடர்ந்து இந்த சவாலை செய்ய வேண்டும் என அவர் தீர்மானித்து உள்ளார்.

எனினும், இதனை உங்கள் வீட்டில் செய்ய நீங்கள் முயற்சிக்காதீர்கள். இது அறிவியலுக்காக என்று கூறியுள்ளார். இந்த வினோத பரிசோதனையை செய்த பின்னர், இந்த நடைமுறையில் இல்லாத உணவு முறையை தேர்வு செய்ததற்கு, அவருடைய உடல் எந்த வகையில் பிரதிபலித்தது என்ற விவரங்களையும் அவர் விவரித்து உள்ளார்.

இதுபற்றிய வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். எண்ணற்றோர் லைக் செய்துள்ளனர். விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

1 More update

Next Story