ரஷிய அதிபர் பதவியில் இருந்து புதினை நீக்க ஆலோசனை? - உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறைத் தலைவர் தகவல்


ரஷிய அதிபர் பதவியில் இருந்து புதினை நீக்க ஆலோசனை? - உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறைத் தலைவர் தகவல்
x

கோப்புப்படம்

ரஷிய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது குறித்து விவாதித்து வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கீவ்,

ரஷிய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது குறித்து தீவிரமாக விவாதித்து வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் முடிவதற்குள்ளாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்ததாக பத்திரிகைகள் கூறுகின்றன. புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று வருவதாக கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்க்களத்தில் ரஷியா தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், நவம்பர் இறுதிக்குள் கெர்சனை மீண்டும் கைப்பற்றும் இலக்கை உக்ரைன் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் 2014-ல் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியாவை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் புடானோவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story