ஜானி டெப்பை நான் இன்னும் காதலிக்கிறேன் - ஆம்பர் ஹேர்ட்


ஜானி டெப்பை தான் இன்னும் காதலிப்பதாக ஆம்பர் ஹேர்ட் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்புக்கு பின் முதல் முறையாக தனியார் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் ஆம்பர் ஹேர்ட் பங்கேற்றார். அப்போது, இத்தனை நிகழ்வுகள் நடந்த பின்னரும் ஜானி டெப்பை இன்னும் காதலிக்கிறீர்களா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆம்பரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆம்பர், ஆம் நிச்சயமாக. நான் ஜானி டெப்பை காதலிக்கிறேன். நான் அவரை (ஜானி டெப்) என் முழு மனதோடு காதலிக்கிறேன். உடைந்த உறவை மீண்டும் சரிசெய்ய நான் என்னால் முடிந்தவற்றை முயற்சித்தேன். ஆனால், அதை என்னால் சரிசெய்யமுடியவில்லை' என்றார்.

இதையும் படிக்க... முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு: நடிகர் ஜானி டெப் வெற்றி...!Next Story