மாலியில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பில் 10 பேர் உடல் சிதறி பலி


மாலியில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பில் 10 பேர் உடல் சிதறி பலி
x

மாலியில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மத்திய மோப்டி பிராந்தியத்தில் உள்ள செவரே நகரில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அதன் அருகிலேயே ராணுவ முகாம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் முன்தினம் மாலை இந்த ராணுவ முகாமுக்கு அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கரும் புகை மண்டலம் எழுந்தது. குண்டுவெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரும் அப்பாவி பொதுமக்கள் ஆவர். மேலும் இந்த குண்டுவெடிப்பில் விமான நிலையம் மற்றும் ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே மாலி தலைநகர் பமாகோவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 விமானப்படை வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


Next Story