நைஜீரியாவில் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு

Image Courtacy: AFP
இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
அபுஜா,
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடமத்திய மாகாணமாக பிளாட்டியூ உள்ளது. அங்குள்ள மன்ஷு கிராமத்தில் இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடு கோஷ்டி மோதலாக உருவானது. இரண்டு கும்பலை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு கையில் கிடைத்த ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 113 பேர் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் உதவியை நாடினர். இதனால் மன்ஷு கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story






