குவாட் உச்சி மாநாடு - ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமா் மோடி


குவாட் உச்சி மாநாடு -  ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமா் மோடி
x

குவாட் உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் செல்லும் அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல உள்ளார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமொிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், குவாட் நாடுகள் இணைந்து சுதந்திரமாக செயல்படும் மற்றும் இந்தோ-பசிபிக் கொள்கைகளை பாதுகாத்து நிலைநிறுத்தும் என நம்புவதாக கூறினாா்.

குவாட் நாடுகள் புதிய பொருளாதார முன்முயற்சிகளை தொடங்க உள்ளனா். அவா்கள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பை (IPEF) ஏற்படுத்த உள்ளனா். இது 21 ம் நுற்றாண்டின் பொருளாதார ஏற்படாகும். புதிய பொருளாதார சவால்களை சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பொருளாதார கட்டமைப்பானது, "டிஜிட்டல் பொருளாதாரத்தின் விதிகளை அமைப்பது, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான விநியோகத்தை உறுதி செய்வது, நவீன உயர்தரமான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது ஆற்றல் மாற்றத்தை நிர்வகிப்பது ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.

இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு தொடக்க நிகழ்ச்சியில் ஜோ பைடன் கலந்து கொள்ள உள்ளாா். இந்தோ-பசிபிக் நாடுகளை சோ்ந்த தலைவா்களும் இதில் பங்கேற்க உள்ளனா்.

ஜப்பான் நாட்டிற்கு செல்லும் முன் தென்கொாியாவிற்கு செல்லும் ஜோ பைடன் அங்கு நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story