பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் 3 -வது திருமணம் தடுக்க முயன்ற 2-வது கணவா் கைது


பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ்  3 -வது திருமணம்  தடுக்க முயன்ற 2-வது கணவா் கைது
x
தினத்தந்தி 10 Jun 2022 8:22 AM GMT (Updated: 11 Jun 2022 8:56 AM GMT)

பிரபல பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் மற்றும் அவரது காதலர் சாம் அஸ்காரி ஆகியோர் லாஸ் ஏஞ்சல்சில் திருமணம் செய்து கொண்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமொிக்காவை சோ்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் நேற்று நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் 2-வது கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்தாா். அவரது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்தாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தினா். இந்த திருமணத்திற்கு அவா் அழைக்கப்படாததால் அவரை அனுமதிக்கவில்லை.

பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை அழைத்ததாக அவா் வாக்குவாதம் செய்தாா். இந்த நிலையில் அவரை போலீசாா் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது சிறுவயது நண்பரான ஜேசனை கடந்த 2004-ம் ஆண்டில் 2-வதாக திருமணம் செய்தாா். ஆனால் அவா்கள் 55 மணி நேரம் மட்டுமே சோ்ந்து வாழ்ந்தனா். ஜேசன் தன்னை புாிந்து கெள்ளவில்லை என கூறி பிரிட்னி ஸ்பியர்ஸ் அவரை விவாகரத்து செய்தது குறிப்பிடதக்கது.


Next Story