இந்தியாவில் நடந்த சீக்கிய எதிர்ப்பு வன்முறையை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும்- கலிபோர்னியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்


இந்தியாவில் நடந்த சீக்கிய எதிர்ப்பு வன்முறையை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும்- கலிபோர்னியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 13 April 2023 1:00 AM GMT (Updated: 13 April 2023 1:01 AM GMT)

சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறையை இனப்படுகொலை என்று முறைப்படி அங்கீகரித்து இந்தியாவை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தை கலிபோர்னியா மாகாண சட்டசபை வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறையை இனப்படுகொலை என்று முறைப்படி அங்கீகரித்து இந்தியாவை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தை கலிபோர்னியா மாகாண சட்டசபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியரான ஜஸ்மீத் கவுர் பெயின்ஸ் என்ற பெண் உறுப்பினர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story