ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது கார் குண்டு தாக்குதல்- 6 பேர் பலி


ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது கார் குண்டு தாக்குதல்- 6 பேர் பலி
x

கோப்புப்படம் 

ஏமன் நாட்டில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏமன்,

ஏமன் நாட்டின் தெற்கு பகுதி நகரமான ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் 4 பொதுமக்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஏடன் நகரில் அடிக்கடி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story