சீனாவில் வாடகை அப்பா சேவை அறிமுகம்: முண்டியடித்து செல்லும் இளம்பெண்கள்...!


சீனாவில் வாடகை அப்பா சேவை அறிமுகம்: முண்டியடித்து செல்லும் இளம்பெண்கள்...!
x

வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த ‘பாத் ஹவுஸ்’ ஒரு அறிய வகை சேவையை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

பீஜிங்,

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. 'Rent a Dad' என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள்.

அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு உடை மாற்றி விடுவது என அனைத்தையும் கவனித்து கொள்கிறார்கள். குறிப்பாக, இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேவைக்கு பலர் வரவேற்ப்பு அளித்துள்ளனர்.

பெண்களுக்கு மட்டும் உள்ள பகுதிகளில், சிறுவர்கள் நுழைவதை தடுக்க இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், தன் மகனை வாடகை தந்தை என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்து, நீச்சல் குளத்தில் சுதந்திரமாக நீந்தி மகிழலாம். வாடகைத் தந்தை அதுவரை உங்கள் மகனைக் கவனித்து, ஆண்கள் குளிப்பதற்கு அழைத்துச் செல்வார் என்று அந்த குளியல் இல்லம் (Bath House) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு ஆண் மற்றும் பெண் சிறுவர்களுக்கான தனித்தனி அறைகளையும், உணவு, பானங்கள், மசாஜ்கள், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளை அனுபவிக்கக்கூடிய யுனிசெக்ஸ் லவுஞ்ச் பகுதியையும் வழங்குகின்றதாம் இந்த சேவை.


Related Tags :
Next Story