தைவானை நோக்கி 43 போர் விமானங்களை அனுப்பிய சீனா...!


தினத்தந்தி 26 Dec 2022 5:04 AM GMT (Updated: 26 Dec 2022 8:29 AM GMT)

தைவானை நோக்கி 43 போர் விமானங்களை அனுப்பிய சீனா, 'போர்ப்பயிற்சி'களை நடத்துகிறது.

ராய்ட்டர்ஸ்:

கடந்த 24 மணி நேரத்தில் நாற்பத்து மூன்று சீன விமானப்படை விமானங்கள் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.உரிமை கோரும் தீவுக்கு அருகில் சீனா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

தைவானைத் தனது சொந்தப் பகுதி எனக் கூறும் சீனா, ஞாயிற்றுக்கிழமை தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் "போர்ப்பயிற்சி" நடத்தியதாகக் கூறியது.

சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான், சீனா பிராந்திய அமைதியை அழித்து தைவானின் மக்களை சிக்கவைக்க முயற்சிப்பதை இந்த பயிற்சிகள் காட்டுவதாக கூறி உள்ளது.

தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, சமீபத்திய ஊடுருவலில் ஈடுபட்டுள்ள ஜெட் விமானங்கள், அதிகாரப்பூர்வமற்ற தைவான் ஜலசந்தியின் சராசரிக் எல்லை கோட்டைக் கடந்தன. தைவான் அருகே ஏழு சீன கடற்படைக் கப்பல்களும் நிறுத்த்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன விமானங்களை எச்சரிக்க தைவான் போர் விமானங்களை அனுப்பி உள்ளதாக தைவான் அமைச்சகம் கூறி உள்ளது.


Next Story