"சீனா தற்போது மாறிவிட்டது" ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கருத்து


சீனா தற்போது மாறிவிட்டது ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்  கருத்து
x

ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக பதவியேற்ற அந்தோணி அல்பனிஸ், குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் புறப்படும் செய்தியாளர்களை சந்தித்தார்.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே பலப்பரிட்சை நிலவியது.

ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளில் பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று, பெண் உரிமைகள், அரசியல் ஒருமைப்பாடு மற்றும் காட்டுத்தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் உள்பட பல சிக்கல்களை எதிர்கொண்டது. இவை ஆளும் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை சரித்தன. குறிப்பாக பருவநிலை மாற்றம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போராட்டங்கள் ஆளும் கட்சி மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதனால் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க ஸ்காட் மாரிசனின் லிபரல் கட்சி கடுமையாக போராடியது. ஆனால் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தேர்தலில் வெற்றி பெற்றது.

ஜப்பானில் நாளை நடக்கவுள்ள 'குவாட்' பாதுகாப்பு மாநாட்டில், புதிய பிரதமர் ஆல்பேன்ஸ் பங்கேற்க வேண்டி இருப்பதால், அவரும், புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங்கும், இன்றுபதவி ஏற்றனர். அவர்களுக்கு, கவர்னர் ஜெனரல் டேவிட் ஹியூர்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.துணை பிரதமராக ரிச்சர்ட் மார்ல்ஸ் பதவி ஏற்றார்.

ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக பதவியேற்ற அந்தோணி அல்பனிஸ், குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் புறப்படும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, " சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு தொடர்ந்து கடினமானதாகவே உள்ளது. சீனாதான் மாறிவிட்டது. ஆஸ்திரேலியா அல்ல" என்றார்.

1 More update

Next Story