புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா


புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா
x

கோப்புப்படம்

பூமியை கண்காணிப்பதற்காக புதிய செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது.

பீஜிங்,

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை பெறும் வகையில் சீனாவின் சமீபத்திய திட்டங்கள் அமைகிறது. தனக்கென்று புதிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவது, நிலவுக்கு மனிதனை அனுப்புவது என புரட்சிகர திட்டங்களை வகுத்து செயல்படுகிறது.

மேலும் தனது ராக்கெட்டுகளை கொண்டு செயற்கைக்கோள்கள் ஏவி விண்ணகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. அந்தவகையில் காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை குறித்து மேம்பட்ட தகவல்களை பெறும் வகையில் சீன நிறுவனம் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது.

ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-4சி என்னும் ராக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சுமந்தப்படி வானிற்குள் பறந்தது. பின்னர் திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. நில அளவீடு, நகர்புற வளர்ச்சியை தீர்மானம், விளைபொருட்கள் மதிப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Next Story