சீன விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்


சீன விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்
x

கோப்புப்படம்

சீன விண்கலம் டியான்சூ-6 வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பீஜிங்,

சீனா விண்வெளியில் டியாங்யாங் விண்வெளி நிலையத்தை கட்டி முடித்தது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கும் வகையில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 2038-ல் முடிவடைவதாக சீனா கணித்துள்ளது. இங்கு முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் சீன விண்வெளி குழுவினர் சென்றனர்.

இந்த நிலையில் தற்போது சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானில் உள்ள வெங்சாங் ஏவுதளத்தில் இருந்து டியான்சூ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. அது வெற்றிகரமாக விண்ணில் சரியான சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த விண்கலம் டியாங்யாங் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டு விண்வெளி உடைகள், எரிபொருள் போன்றவற்றை அதற்கு வழங்கும். மேலும் 16 மனிதர்களையும் அங்கு கொண்டு செல்லும் என சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story