சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; ராணுவ பட்ஜெட்டை மேலும் உயர்த்த வாய்ப்பு


சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; ராணுவ பட்ஜெட்டை மேலும் உயர்த்த வாய்ப்பு
x

சீனாவில் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடர் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உயர்மட்ட ஆலோசனை குழுவின் கூட்டத்துடன் நேற்று தொடங்கியது.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தொடரில் சீனாவின் புதிய பிரதமர் உள்பட உயர்மட்ட தலைவர்கள் பலர் தேர்வு செய்யப்படவுள்ளனர். சீன அதிபர் ஜின்பிங்கின் விசுவாசியான லி கியாங் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) கூட்டத்தொடரில் சீன ராணுவத்துக்கான பட்ஜெட் அறிவிக்கப்படும் என தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ராணுவ பட்ஜெட்டை அதிகரித்து வரும் சீனா இந்த ஆண்டும் ராணுவத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சீனா பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1 சதவீதம் அதிகரித்து, 230 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.17.57 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டது. இது இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story