புதிய விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்: விண்வெளியில் சீன வீரர்கள் நடை பயணம்


புதிய விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்: விண்வெளியில் சீன வீரர்கள் நடை பயணம்
x

‘தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

பீஜிங்,

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஷென் டாங், கை சுஹி ஆகிய 2 விண்வெளி வீரர்களும், லியு யாங் என்கிற வீராங்கனையும் கடந்த 5 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்து, 'தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக சீன விண்வெளி வீரர்கள் ஷென் டாங் மற்றும் கை சுஹி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்டனர். விண்வெளியில் நடப்பதற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்து கொண்டு விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்த இருவரும் விண்வெளி நிலையத்தின் வெளிப்புறம் இருக்கும் பிரமாண்டமான எந்திர கையில் பொருத்த வேண்டிய உபகரணங்களை பொருத்தியதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story