சீனாவில் கடும்வெயில் மஞ்சள் எச்சரிக்கை நீட்டிப்பு


சீனாவில் கடும்வெயில் மஞ்சள் எச்சரிக்கை நீட்டிப்பு
x

சீனாவில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது.

பிஜீங்,

சீனாவில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. இந்தநிலையில் தலைநகர் பீஜிங், யுனான், குவாங்சி, மங்கோலியா உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகலாம் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியது. எனவே அங்கு அதிக வெப்பநிலைக்காக விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை மேலும் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இதனால் பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வெயிலில் வேலை பார்ப்பவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு சீன அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story