எதிரிகளுக்கு வைத்த பொறியில் சிக்கி சீன நீர்மூழ்கி கப்பல் சேதம் - 55 பேர் பலியானதாக இங்கிலாந்து தகவல்


எதிரிகளுக்கு வைத்த பொறியில் சிக்கி சீன நீர்மூழ்கி கப்பல் சேதம் - 55 பேர் பலியானதாக இங்கிலாந்து தகவல்
x

கோப்புப்படம் 

எதிரிகளுக்கு வைத்த பொறியில் சீன கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று சிக்கி கொண்டது.

பீஜிங்,

சீனா-கொரிய தீபகற்பம் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் இரும்பு சங்கிலியால் உருவாக்கப்பட்ட ஒரு கடல்பொறியை சீனா அமைத்துள்ளது. எதிரி நாடுகளின் கப்பல்கள் தங்களது எல்லைக்குள் நுழைவதை தடுக்க சீனாவால் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தன்கையால் தனது கண்ணையே குத்திக்கொள்வது போல அங்கு ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது சீன கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று அந்த பொறியில் சிக்கி கொண்டது. மேலும் அந்த சங்கிலியில் நங்கூரம் மோதியதால் அந்த கப்பல் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கப்பலுக்குள் இருந்த 21 கடற்படை வீரர்கள் உள்பட 55 பேர் மூச்சுத்திணறி பலியானதாக இங்கிலாந்தில் உள்ள ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதனை சீனா ரகசியமாக வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை சீனா முற்றிலும் மறுத்துள்ளது.


Next Story