இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2022 அறிவிப்பு


இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2022 அறிவிப்பு
x

இத்தாலியில் வெப்பமான மற்றும் வறட்சியான ஆண்டு என்ற நிலையை 2022 எட்டி உள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனை கணக்கிடுவதற்காக இத்தாலியில் 1961-ம் ஆண்டு முதல் பதிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை இத்தாலியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது. அதன்படி தற்போது `2022-ல் இத்தாலியின் காலநிலை' என்ற தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு முடிவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ல் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் மிகவும் வெப்பமான மற்றும் வறட்சியான ஆண்டு என்ற நிலையை 2022 எட்டி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் அங்கு விவசாய துறை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.


Next Story