கொலம்பியா: எரிபொருள் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு


கொலம்பியா: எரிபொருள் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு
x

தீ விபத்து காரணமாக துறைமுக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாரன்கில்லா,

கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாரன்கில்லா துறைமுகம் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த எரிபொருள் டேங்க் நேற்று இரவு திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள எரிபொருள் டேங்குகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தீயணைப்பு துறை கூறி தெரிவித்துள்ளது.

தீயணைப்பு பணியின்போது ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். ஜேவியர் சோலனோ (வயது 53) என்ற அந்த வீரர், கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்ததாக தீயணைப்பு துறை தலைவர் ஜேமி பெரேஸ் தெரிவித்தார்.

குடோனில் உள்ள மற்ற டேங்குகளுக்கு தீ பரவாமல் தடுப்பதே தங்கள் குறிக்கோள் என்றும் அவர் கூறினார். தீ விபத்து காரணமாக துறைமுக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story