அமெரிக்க விமான நிலையத்தின் இணையதளங்களில் சைபர் தாக்குதல்


அமெரிக்க விமான நிலையத்தின் இணையதளங்களில் சைபர் தாக்குதல்
x

அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நியூயார்க், அட்லாண்டா,

சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன. கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியதாக குற்றம் சாட்டியுள்ளது.

சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story