துனிசியாவில் யூதர்களின் புனித யாத்திரையில் போலீஸ் துப்பாக்கி சூடு - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


துனிசியாவில் யூதர்களின் புனித யாத்திரையில் போலீஸ் துப்பாக்கி சூடு - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x

துனிசியாவில் யூதர்களின் புனித யாத்திரையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரான்ஸ் நாட்டவர் உள்பட 5 பேர் பலியாகினர்.

துனிஸ்,

துனிசியா நாட்டின் மத்திய தரைக்கடல் தீவான டிஜெர்பாவில் யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் புனித யாத்திரை நடந்தது. இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் யூதர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த கடற்படை போலீஸ்காரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு கடற்படை போலீஸ்காரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் உயிரிழந்ததாக துனிசிய வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story