அட்லாண்டிக் பெருங்கடலின் தரைப்பரப்பில் மர்ம துளைகள் கண்டுபிடிப்பு


அட்லாண்டிக் பெருங்கடலின் தரைப்பரப்பில் மர்ம துளைகள் கண்டுபிடிப்பு
x

அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் தரைப்பரப்பில் மர்ம துளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தேசிய கடல்சார் சூழலில் நிர்வாகம்(என்.ஓ.ஏ.ஏ.) என்ற அமைப்பு சார்பில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் போது அட்லாண்டிக் கடலின் ஆழமான தரைப்பகுதியில் மர்மான துளைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். சுமார் 2,540 அடி ஆழத்தில் வரிசையான முறையில் அமைந்திருக்கும் இந்த துளைகள் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துளைகள் மனிதனால் உருவாக்கப்பட்டதை போலத் தோன்றினாலும், கடலின் அடிப்பகுதிக்குச் சென்று எந்தவொரு மனிதராலும் இப்படி துளைகளை அமைக்க முடியாது. எனவே சுற்றியிருக்கும் வண்டல் குவியல்களால் இந்த துளைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story