7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டிஸ்னி நிறுவனம் !


7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டிஸ்னி நிறுவனம் !
x

டிஸ்னி நிறுவனம் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாகவும், எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாதது உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 7 ஆயிரம் பணி இடங்களை குறைப்பதற்கான கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story