உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி


உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி
x

Image Courtesy: AFP

கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.

வாஷிங்டன்,

உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம் வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா பல்வேறு நாடுகளில் உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா காலத்தில் 2020.-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இந்நிலையில், 5.5 அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. 7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை டிஸ்னி விரைவில் வெளியிட உள்ளது.


Next Story