டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி இவானா 73 வயதில் காலமானார்


டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி இவானா 73 வயதில் காலமானார்
x

டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா(வயது 73). இவர் நியூயார்கில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார்.

நேற்றைய தினம் நியூயார்க் நகர காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு வந்த அழைப்பின் பேரில், போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனார்.

இவானாவின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இவர் டொனால்ட் ஜூனியர், எரிக் டிரம்ப் மற்றும் இவாங்கா டிரம்பின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story